×

கரூர், பெரம்பலூர் உள்பட 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர், திருச்சி கர்னல் நேரில் ஆய்வு

பெரம்பலூர்: கரூர், பெரம்பலூர் உள்பட 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 1ம் தேதி நடைபெறுகிறது. முன்னேற்பாடு பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், திருச்சி மண் டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகப் பெருந் திட்ட வளாகத்தில் அமை ந்துள்ள மாவட்ட விளையா ட்டு மைதானத்தில் வருகிற ஜூலை 1ம்தேதி முதல் 5 ம் தேதி வரை 16 மாவட்ட ங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவத்திற்கு ஆள்சேர்ப்புமுகாம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு முன்னிட்டு முகாம் நடைபெறும் இடத் தில் மேற்கொள்ளப்பட்டு ள்ள பணிகளின் முன்னேற் றம் குறித்து மாவட்டகலெ க்டர் கற்பகம், திருச்சி மண் டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலு வலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று (20ம்தேதி) பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் தலை மையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆ லோசனைக் கூட்டம் நடை பெற்றது. 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணு வத்தில் ஆள் சேர்ப்பதற்கா ன முகாம் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத் தில் நடத்தப்படவுள்ளது. ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஆன்லைனில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடற் தகுதி, சான்றிதழ் சரிபார் ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு தகுதியான வர்களை ராணுவப் பணி க்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாமாக நடத்தப்படவுள் ளது.

இந்த முகாமில், திருச்சிராப் பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலா டுதுறை, காரைக்கால் ஆ கிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங் குபெற உள்ளனர். முகாம் சிறப்பாக நடைபெறும் வ கையில் எந்தெந்த பணிக ள் எந்தெந்த இடத்தில் செ ய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து மாவட்டக் கலெக்டர் ராணுவ அதி காரிகளுடன் கலந்துரையா டி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். முகாமிற்கு வரும் இளை ஞர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படவுள்ள இடங்க ளில் போதிய இரண்டடுக்கு தடுப்புகள், இணைய தளத் துடன் கூடிய கணினி வச திகள், இரவு நேரத்தில் மை தானம் முழுவதும் மின் விளக்குகள் அமைத்தல், சாமியானா பந்தல்கள் அ மைத்தல் உள்ளிட்ட பணிக ளை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்து றையின் மேற்கொள்ள வே ண்டும், முகாமிற்கு வரும் நபர்களுக்கு போதிய குடி நீர் வசதியை நகராட்சி ஆ ணையர் வழங்கவேண்டும். குறைந்த விலையில் உண வுப் பொருட்கள் விற்கும் பொறுப்பை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்க வேண்டும் என மா வட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார். இதில், பெரம்ப லூர் மாவட்ட ஏடிஎஸ்பி (த லைமையிடம்) மதியழகன், வருவாய் கோட்டாட்சிய நிறைமதி, பொதுப்பணித்து றை செயற் பொறியாளர் தேவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியா ளர் சுஜாதா, முதன்மைக் கல்விஅலுவலர் மணிவண் ணன், நகராட்சி ஆணையர் (பொ) ராதா உள்ளிட்ட அ னைத்துத் துறை அலுவலர் கள் உடனிருந்தனர்.

The post கரூர், பெரம்பலூர் உள்பட 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர், திருச்சி கர்னல் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karur ,Perambalur ,Trichy Colonel ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு